மெர்சல் படத்தின் புதிய சாதனை...! ரசிகர்கள் கொண்டாட்டம்...!



new-record-mersal-firsht-tamil-albam

 

இளையதளபதி விஜய்க்கு போன வருடம் ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றி பெட்ரா படம் தான் மெர்சல். இந்த படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. மெர்சல் படம் தற்போது இணையத்தில் மாபெரும் சாதனையை புரிந்துள்ளது. 
இணையத்தில் 35 கோடி வியூஸ் பெற்ற முதல் தமிழ் ஆல்பம் எனும் சிறப்பை மெர்சல் படம் பெற்றுள்ளது.

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று ஹிட் அடித்தது. இந்தப் படம் வெளியான ஒரு சில நாட்களில் படத்தில் இடம் பெற்றிருந்த ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட எதிர்ப்பு படத்திற்கு கூடுதல் விளம்பரமாய் மாறிப்போனது. இதனால் படம் எதிர்பார்த்ததை விட அதிக வசூலை குவித்தது. 

இதன்படி படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தற்போது சர்க்கார் என்னும் படம் நடித்து வருகிறார். சர்க்கார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். 

மெர்சல் படம் வசூலில் சாதனை படைத்ததோடு மட்டுமின்றி, தென்கொரியாவில் உள்ள புச்சியான் நகரில், சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் ஆசியாவின் சிறந்த படங்களில் ஒன்றாக தேர்வு செய்து திரையிடப்பட்டது. மேலும் பிரிட்டனின் 4-வது தேசிய திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான பிரிவில் விருதையும் தட்டிச் சென்றது.
மேலும் இந்த படம் சீன மொழியிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வர இருக்கிறது என தகவல் வெளியாகி இருக்கிறது. 

இந்நிலையில் இந்தப் படத்தின் பாடல்களை இதுவரை 350 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். தமிழ் சினிமாவில் இதுவே அதிக பார்வையாளர்கள் பார்த்த ஆல்பம் என்று சோனி நிறுவனம்  தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அவர் தற்போது சர்க்கார் என்னும் படம் நடித்து வருகிறார். சர்க்கார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் வருகின்ற தீபாவளிக்கு இந்த படம் திரைக்கு வருவதாக உள்ளது. இந்த படமும் விஜய்க்கு ஹிட் கொடுக்காம என்று ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கின்றனர். 

 

Proud, Prouder, Proudest! #Mersal becomes the First Tamil album to hit 350 MILLION milestone! @arrahman @actorvijay @Atlee_dir @ThenandalFilms @Lyricist_Vivek pic.twitter.com/qNdL5eNaEN

— Sony Music South (@SonyMusicSouth) September 19, 2018