தமிழகம் சினிமா

ரசிகர்களுக்கு ஒரே குஷி.! வரும் தமிழ் புத்தாண்டு மற்றும் சன் டிவி-யின் 28 ஆம் ஆண்டு பிறந்தநாள்.! என்னென்ன படங்கள் தெரியுமா?

Summary:

வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு புத்தம் புது திரைப்பபடங்களை ஒளிபரப்பு

வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு புத்தம் புது திரைப்பபடங்களை ஒளிபரப்புகிறது சன் தொலைக்காட்சி.

இந்தியாவில் பிரபலமான தொலைக்காட்சிகள் என்றால் அதில் சன் தொலைக்காட்சிக்கு மிக முக்கிய பங்கு உண்டு. சன் டிவியில் பண்டிகை என்றால் புத்தம் புது படங்களையும் ஒளிபரப்பி TRP யில் முதல் இடத்தில், அதிலும் யாராலும் அசைக்கமுடியாத இடத்தில் இருக்கும்.

அந்த வகையில் தமிழ் புத்தாண்டு மற்றும் சன் டிவி-யின் 28 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு திரைக்கு வந்து சில மாதங்களே ஆன, தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் நடித்த "மாஸ்டர்" படத்தை ஒளிபரப்புகிறது சன் டிவி.

அதேபோல் நடிகர் சந்தானம், அனைகா சோடி, சஷ்டிகா, பிருத்விராஜ், மொட்டை ராஜேந்திரன், டைகர் தங்கதுரை ஆகியோர் நடித்த  "பாரிஸ் ஜெயராஜ்" படத்தை தமிழ் புத்தாண்டு மற்றும் சன் டிவி-யின் 28 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் தேதி காலை11 மணிக்கு ஒளிபரப்புகிறது சன் டிவி. இதற்கான புரோமக்களையும் ஒளிபரப்பி வருகின்றனர் சன் டிவி.


Advertisement