சினிமா

முதன் முதலாக வெளியான நீயா நானா கோபிநாத்தின் மகள் புகைப்படம்!

Summary:

Neeya naana gopinath daughter venba images goes viral

விஜய் டிவி என்றாலே அதில் வேலைசெய்பவர்கள் பிரபலமாகிவிடுவார்கள் என்று அனைவரும் நினைத்து வருகின்றனர். அதற்கு உதாரணம் நடிகர் சிவகார்த்திகேயன், நகைச்சுவை நடிகர் சந்தானம், ரோபோ சங்கர் இன்னும் பலபேர் உள்ளனர்.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர்களில் ஒருவர்தான் நீயா நானா கோபிநாத். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் பிறந்தவர்தான் கோபிநாத். BBA படிப்பை முடித்து வேலை தேடி சென்னை வந்துள்ளார். திரையுலகம் மீதுள்ள ஆர்வத்தில் பல சேனல்களில் வாய்ப்பு கேட்டுள்ளார் ஆனால் அப்பொழுது எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காததால் அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் சேர்ந்து மார்க்கெட்டிங் வேலையை செய்துள்ளார். பிறகு நிறைய சின்ன சின்ன வேலையை பார்த்துள்ளார் .

அதன்பிறகுதான் விஜய் தொலைக்காட்சியில் சேர்த்துள்ளார் கோபிநாத். இன்று விஜய் டிவி மூலம் பிரபலமானவர்களில் ஐவரும் ஒருவர். இந்நிலையில் 2010 துர்கா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட கோபிநாத்திற்கு வெண்பா என்ற அழகான பெண் குழந்தையும் பிறநதுள்ளார் . பெரும்பாலும் கோபிநாத் தனது மனைவி மற்றும் குழந்தையை வெளியுலகத்திற்கு காண்பிக்காமல் இருந்தார். இதனால் இவர் பங்குபெறும் விருது வழங்கும் விழாகளிலோ, பொது நிகழ்ச்சிகளிலோ இவரது மனைவி மற்றும் குழந்தையை அவ்வளவாக காண முடிவதும் இல்லை.

இந்நிலையில் சமீபத்தில் நடந்து ஒரு பொது நிகழ்ச்சியில் தனது மனைவி மற்றும் குழந்தைய அழைத்து வந்தார். மேலும் அவரது அழகான குழந்தையயை பார்த்த ஒரு சில பிரபலங்கள் வெண்பாவை கொஞ்சியதோடு அவரிடம் செலிபி புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.

மேலும் வெண்பாவின் குயூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாக அதனை கோபிநாத்தின் ரசிகர்கள் பெரிதும் ரசித்து வருகின்றனர்.


Advertisement