சினிமா Covid-19

நயன்தாரா தடுப்பூசி போட்ட விஷயத்தில் எழுந்த சர்ச்சை.! முற்றுப்புள்ளி வைத்து நயன்தாரா தரப்பு விளக்கம்.!

Summary:

நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2ஆம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா தொ

நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2ஆம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. 

இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து தங்களை காப்பாற்றி கொள்ள பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். மேலும், மக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த திரைப்பிரபலங்கள் பலரும் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகை நயன்தாரா அண்மையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

நயன்தாரா தடுப்பூசி செலுத்திக் கொண்டதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன். ஆனால் அந்தப் படத்தில் ஊசி போடும் செவிலியர் கையில் ஊசியே இல்லாது போல் தெரிந்தது. இதனால் ஊசியே இல்லாமல் தடுப்பூசி போட்டுக் கொண்டாரா நயன்தாரா என்ற ரீதியில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் அதற்கு தற்போது விளக்கம் அளிக்கும் வகையில் புதிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.


Advertisement