கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகை நயன்தாரா.! புகைப்படத்தை வெளியிட்ட அவரது காதலர்.!



nayanthara-take-corona-vaccine

நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2ஆம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து தங்களை காப்பாற்றி கொள்ள பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். 

மேலும், மக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த திரைப்பிரபலங்கள் பலரும் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகை நயன்தாரா அண்மையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகை நயன்தாரா தனியார் மருத்துவமனை ஒன்றில் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். இந்தநிலையில், நயன்தாரா தடுப்பூசி செலுத்திக் கொண்டதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.