சினிமா

காதலனுடன் தனி விமானத்தில் செல்ல நயன்தாரா செலவழித்த தொகை எவ்வளவு தெரியுமா?

Summary:

Nayanthara spend 40 lakshs for aeroplane

தமிழ் சினிமாவில் பல உச்ச பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா. இவரது கைவசம் தற்போது நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன.

இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருவதால் ஓணம் பண்டிகையை கொண்டாட தனி விமானத்தில் தனது காதலனான விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்றார்.

இந்நிலையில் தற்போது நயன்தாரா தனி விமானத்தில் தனது காதலனுடன் செல்ல செலவழித்த தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அவ்விமானத்தில் செல்ல நடிகை நயன்தாரா 40 லட்சம் செலவு செய்துள்ளாராம்.


Advertisement