சினிமா

நயன்தாராவிற்கு போட்டியாக களத்தில் குதிக்கும் முன்னணி தமிழ் நடிகை.

Summary:

nayanthara opponent samantha tamil cinima

தமிழ் சினிமா இதுவரை கடந்து வந்த பாதையை பார்த்தீர்களானால் ஹீரோக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அதிலும் குறிப்பாக முன்னணி ஹீரோக்களுக்கு தனிக்கதை  அமைத்து சினிமா எடுத்த வரலாறும் உண்டு.  அதுவே,  தற்சமயம் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்கள் சமீபத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளன.  இந்த பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பவர் நயன்தாரா.

அவர் சமீபகாலமாக ஹீரோயின்களை அதிலும் குறிப்பாக பெண்களை மையமாக கொண்டு எடுக்கப்படும் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் .  அதன் தாக்கமாகவே  சமீபத்தில் வெளிவந்த  அறம்,  கோலமாவு கோகிலா,  இமைக்கா நொடிகள் போன்ற படங்கள் இவ்வகை படங்களை ரசிகர்களும் ஹீரோக்களுக்கு இணையான படங்களாக ஆமோதித்து வரவேற்று வசூல் மழையை பொழியச் செய்கிறார்கள்.

Image result for u-turn movie

அந்த வரிசையில் தற்போது புதிதாக இணைபவர் சமந்தா அவர்  நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'யு-ட ர்ன்' திரைப்படம் தமிழகத்தில் 3.7 கோடி வசூலையும் தெலுங்கானா ஆந்திராவில் 7 முதல் 8 கோடி வசூல் செய்துள்ளதாம். அதேபோல் அமெரிக்காவில்  80 லட்சத்திற்கும் அதிகமான வசூலை ஈட்டித் தந்துள்ளது.


Advertisement