சினிமா

நயன்தாராவின் இந்த நல்ல மனசு வேறு யாருக்கு வரும்!!

Summary:

சமீபத்தில் பல சிறந்த நடிகர்களுக்கு இணையான பெயரையும் புகழையும் சம்பாதித்து வருபவர் நயன்தாரா. தன் சொந்த வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்தாலும், தன்னை நம்பி வரும் இயக்குனர், தயாரிப்பாளர்களுக்கு தனது திறமையான நடிப்பால் நல்ல வருமானத்தை தேடி தருகிறார்.

அவர் கடந்த சில வருடங்களாகவே கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களாக தேடி நடித்து வருகிறார். கதாநாயகனே இல்லாமல் அவரது நடிப்பில் வெளிவந்த அறம், கோலமாவு கோகிலா போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தயாரிப்பாளர்களும் நல்ல வருமானத்தை ஈட்டி தந்தது.

nayanthara க்கான பட முடிவு

அவர் படங்களில் மட்டுமல்ல, தன் சொந்த வாழிக்கையிலும் அவருக்கு இருக்கும் நல்லபண்பு இங்கு யாருக்கும் தெரியவில்லை. அவரின் மீது விமர்சனங்களை மட்டும் அள்ளி வீசிகின்றனர்.

தற்போது இமைக்கா நொடிகள் படம் நீதிமன்ற நிபந்தனைகளுடன் திரைக்கு வந்தது. 
இந்நிலையில் நயன்தாராவிற்கு தயாரிப்பாளர் சார்பில் ரூ 75 லட்சம் வரை சம்பள பாக்கி வர வேண்டியிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் படம் ரிலிஸிற்கு ஏற்பட்ட நெருக்கடி காரணமாக மலைத்த தயாரிப்பாளர்க்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக நடிகை நயன் செய்துள்ளார்.

imaika nodikal nayanthara க்கான பட முடிவு

வழக்கு நடந்த அந்த நேரத்தில் நயன்தாரா அந்த பணத்தை விட்டு விடுங்கள், இனி கேட்க வேண்டாம் என்று கூறிவிட்டாராம். அதை தொடர்ந்து தயாரிப்பாளருக்கு பெரும் நிம்மதி ஏற்பட்டதாம், முன்னணி ஹீரோக்கள் சம்பளத்தை வைத்தால் தான் டப்பிங் பேசுவேன் என்று கூறும் நிலையில், நயன்தாரா மனசு யாருக்கும் வரும்.

இது மட்டுமின்றி மேக்கப் மேன், லைட் மேன் என பலருக்கும் பல உதவிகளை தன் சார்பில் சொந்த பணத்தில் செய்துள்ளார் நடிகை நயன்தாரா என்ன மனசுய லேடி சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் தான்.
 


Advertisement