பட வாய்ப்பு இல்லாமல யு ட்யுப் பக்கம் சென்ற நயன்தாரா.. ஏன் இந்த திடீர் முடிவு.?



Nayanthara movie latest update

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து கலக்கி வருகிறார். தமிழில் முதன் முதலில் 'ஐயா' திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

nayanthara

முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த நயன்தாரா, தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலை நாட்டினார். தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து 'லேடிஸ் சூப்பர் ஸ்டார்' நயன்தாரா எனும் பெயர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது .

இது போன்ற நிலையில், நயன்தாரா 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தில் நடிக்கும் போது திரைப்பட இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது.

nayanthara

இதனால் மனம் உடைந்து போன நயன்தாரா தொடர்ந்து தனக்கேத்த கதைகளை தேர்வு செய்து வந்தார். இதனையடுத்து தற்போது பிரபல யூ டயுபரான ட்யூட் விக்கியின் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.