சினிமா

கோவாவில் நயன்தாரா அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்! மாமியாருக்கு வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன்! வைரலாகும் புகைப்படங்கள்!

Summary:

nayanthara mother birthday celebrated in goa with vignesh shivan

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மனதில் கொடிகட்டி பறப்பவர் நடிகை நயன்தாரா. ஹீரோக்களுக்கு இணையாக இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்தபோது, நயன்தாராவிற்கும், அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

 அதனைத் தொடர்ந்து இருவரும் ஒன்றாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, புகைப்படங்களை வெளியிடுவது என பிஸியாக இருந்து வருகின்றனர். மேலும் அனைத்து விழாக்களையும் இருவரும் ஒன்றாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் குடும்பத்துடன் கோவா சென்றுள்ளனர். அங்கு கார்டனில் வெள்ளை நிற உடையில் நயன்தாரா  தேவதை போன்று இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் நேற்று கோவாவில்  நயன்தாரா தனது அம்மாவின் பிறந்தநாளை விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அதனை தொடர்ந்து அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு விக்னேஷ் தனது மாமியாருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

 


Advertisement