சினிமா

ரஜினியின் அடுத்த படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? வெளியான சுவாரசிய தகவல்!

Summary:

Nayanthara is casting with super star 163 movie

பேட்ட படத்தை தொடர்ந்து AR முருகதாஸ் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தனது இரண்டாவது மகளின் கல்யாணத்தில் பிஸியாக இருந்த சூப்பர் ஸ்டார் தற்போது அத்த படத்திற்கு தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது.

AR முருகதாஸ் இயக்கம் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், முதலில் முருகதாஸ் கூறிய கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்றும், அதன் பின்னர் வேறு கதை தயார் செய்து அதை ரஜினியிடம் கூற அந்த கதை ரஜினிக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் அந்த படத்தின் பெயர் நாற்காலி என்றும் கூறப்பட்டது.  ஆனால் அதை AR முருகதாஸ் மறுத்தார்.

இந்நிலையில் விரைவில் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ள நிலையில் படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்பது பற்றி இதுவரை எந்த தகவல்களும் இல்லை. தற்போது சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நயன்தாரா தற்போது தளபதி விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.


Advertisement