சினிமா

அடையாளமே தெரியாமல் மாறிய நயன்தாரா! மிரட்டலான நடிப்பில் ஐரா டீசர்

Summary:

Nayanthara ira movie teaser

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது நடித்து வரும் ஐரா படததின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. நயன்தாரா இரண்டு வேடங்களில் நடிப்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த படங்களான கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. நயன்தாரா நடிப்பில், மா மற்றும் லட்சுமி ஆகிய குறும்படங்களை இயக்கிய இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் தற்பொழுது ஐரா விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. 

அறம் மற்றும் குலேபகாவலி ஆகிய படங்களை தயாரித்த கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது . ஹாரர் த்ரில்லர் கதையை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் நயன்தாரா இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார்

இதில் ஒரு வேடத்தில் இயல்பாக தோற்றமளிக்கும் நயன்தாரா, மற்றொரு வேடத்தில் கருமை நிறமாக சோகத்தில் காட்சியளிக்கிறார். இது திகில் படம் என்பதால், நயன்தாராவின் மற்றொரு வேடம் பேயாக இருக்கம் என தெரிகிறது. இன்று இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. நயன்தாராவின் வித்தியாசமான நடிப்பை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 


Advertisement