சினிமா

சூப்பர் ஸ்டாரின் 2.0 படத்தை பார்த்து லேடி சூப்பர் ஸ்டார் நயன் என்ன கூறியுள்ளார் தெரியுமா?

Summary:

Nayanthara about 2.0 movie

தமிழ் சினிமாவை உலக அளவில் தலைநிமிர வைத்த பெருமை 2.0 வை சேரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கற்பனையால் கூட எட்டி பிடிக்கமுடியாத காட்சிகள். இதெல்லாம் எப்படி செய்தார்கள் என வியக்க வைக்கும் விஎப்எக்ஸ் காட்சிகள் படம் பார்க்கும் அனைவரையும் பிரமிக்க வைக்கும் அளவிற்கு உள்ளது சங்கரின் 2.0 திரைப்படம்.

2.0 படத்தை பார்த்த அனைவரும் "இது பிரம்மாண்டத்தின் உச்சம்; தமிழ் சினிமாவை ஹாலிவுட் அளவிற்கு உயர்த்திவிட்டார் இயக்குனர் சங்கர், ரஜினி மற்றும் அக்சய் குமார் நடிப்பு வேற லெவல்" என புகழாரம் சூட்டி வருகின்றனர்.

ரசிகர்களை மட்டுமின்றி திரையுலகத்தை சேர்ந்த பல முன்னனி கலைஞர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது 2.0 படம். இப்படி ஒரு பிரமான்டத்தை தமிழ் சினிமா இதுவரை கண்டதில்லை என பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். 

அந்த வகையில் 2.0 படத்தைப் பார்த்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, "இயக்குநர் சங்கரின் மிகச் சிறந்த படம் இது. அவரால் எதையும் முடியும் என்பதை நிரூபித்துள்ளார். அனைவரும் 3Dயில் நிச்சயம் பார்த்து அனுபவிக்க வேண்டும். தலைவர் ரஜினிக்கு தலைவணங்குகிறேன்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 


Advertisement