
லீக்கான நயன்- விக்கி கல்யாணப் பத்திரிக்கை! ஆனா திருமணம் எங்கே தெரியுமா?? ஹேப்பியில் ரசிகர்கள்!!
தென்னிந்திய சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையாக கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டு லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறப்பவர் நயன்தாரா. இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடிதான் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தபோது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். பின்னர் இருவரும் கடந்த 7 வருடங்களாக தீவிரமாக காதலித்து வருகின்றனர்.
இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பிய நிலையில் இருவருக்கும் திருப்பதியில் அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் பரவியது.
இந்த நிலையில் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமண பத்திரிக்கை என ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் வரும் ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திருமணத்தில் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement