நள்ளிரவில் காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் வீட்டில் நடந்த கொடூர தாக்குதல்! வலிப்பதாக கதறிய பெண்! வைரலாகும் ஷாக் விடியோ!

நாஞ்சில் விஜயன் வீடு புகுந்து நள்ளிரவில் கொடூர தாக்குதல் நடைபெற்றுள்ளது. அத்தகைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Nanjil vijayn attack by rowdies

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய காமெடி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். அதனைத் தொடர்ந்து அவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி அதன் மூலமும் ஏராளமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனிதா- பீட்டர் பால் மூன்றாவது திருமணம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அப்பொழுது வனிதாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் நாஞ்சில் விஜயன் கருத்து தெரிவித்து வந்தார். மேலும் நாஞ்சில் விஜயனுடன், சூர்யாதேவி என்பவரும் வனிதாவிற்கு எதிராக கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். அதைத்தொடர்ந்து வனிதா சூர்யாதேவி மீது புகார் அளித்தார்.

மேலும் நாஞ்சில் விஜயன் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாகவும் வனிதா கூறினார். ஆனால் அதனை நாஞ்சில் விஜயன் மறுத்தார். இந்த நிலையில் நாஞ்சில் விஜயன் வீட்டுக்குள் நேற்று இரவு ரவுடிகள் புகுந்து அவரை தாக்கியுள்ளனர். மேலும் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட நாஞ்சில் விஜயன், சூர்யாதேவி ரவுடிகளோடு வீட்டிற்குள் புகுந்து கொலை செய்ய முயன்றதாக கூறியுள்ளார். 

மேலும் வீட்டின் உள்ளே பெண் ஒருவரின் கையில் காயம் உள்ளது. இந்நிலையில் அவர் கை வலிப்பதாக அழுது மருத்துவமனைக்கு செல்லலாம் என கூறுகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.