சினிமா

நடிகை கீர்த்தி சுரேஷுடன் அவருக்கே தெரியாமல் செல்பி எடுத்த பிரபல நடிகர்! அதுவும் எப்போது பார்த்தீர்களா! தீயாய் பரவும் புகைப்படம்!

Summary:

நடிகர் நிதின், கீர்த்தி சுரேஷ் தூங்கி கொண்டிருக்கும்போது அவருக்கே தெரியாமல் அருகே சென்று செல்பி எடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிதிரைப்படங்களில் நடித்ததன் மூலம்  தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பார்ப்பவர் கீர்த்தி சுரேஷ்.இவர் தெலுங்கு படங்களிலும் தற்போது பிசியாக உள்ளார். மேலும் சமீபத்தில் தமிழில் இவரது நடிப்பில் உருவான பென்குயின் மற்றும் அதனைத் தொடர்ந்து தெலுங்கில் அவர் நடித்த மிஸ் இந்தியா திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. 

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினியுடன் அண்ணாத்த  மற்றும் இயக்குனர் செல்வராகவனுடன் சாணி காயிதம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் தெலுங்கிலும் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிகர் நிதின் உடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு துபாயில் நடைபெற்று வருகிறது.

      

இந்நிலையில் அப்படத்தின் ஷூட்டிங் தளத்தில் ஓய்வு நேரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் சாய்ந்து உட்கார்ந்தபடி கண்களை துணியால் மறைத்துக் கொண்டு ஒரு குட்டி தூக்கம் போட்டுள்ளார். அப்பொழுது நிதின் மற்றும் இயக்குனர் இருவரும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தெரியாமல் அவரது அருகே சென்று செல்பி எடுத்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.


Advertisement