சினிமா

நாங்க வேற மாறி.. தல அஜித்தின் வலிமை படைத்த மாபெரும் சாதனை! உற்சாகத்துடன் கொண்டாடும் ரசிகர்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக வலம்வரும் தல அஜித் ஹெச்.வி

தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக வலம்வரும் தல அஜித் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தை மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் அஜித் ஆக்சன் கலந்த போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் வலிமை படத்தை தீபாவளியை முன்னிட்டு வெளியிடவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் சமீபத்தில் வலிமை படத்திலிருந்து நாங்க வேற மாறி என்ற பாடல் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் ஒலித்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. யுவன் சங்கர் ராஜா இசையில், விக்னேஷ் சிவன் பாடல் வரிகளை எழுதி இருந்தார். இந்நிலையில் அந்த பாடல் தற்போது 25 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு பெரும் சாதனை படைத்துள்ளது. இதனை தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் தல ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.


Advertisement