அட்டகத்தி நந்திதாவா இது? இப்படி மாறிட்டாரே... வைரலாகும் புகைப்படத்தால் வாயை பிளந்த ரசிகர்கள்!

அட்டகத்தி நந்திதாவா இது? இப்படி மாறிட்டாரே... வைரலாகும் புகைப்படத்தால் வாயை பிளந்த ரசிகர்கள்!


nandithaa glamour photo viral

கன்னட சினிமாவில் நந்தா லவ்ஸ் நந்திதா என்ற  திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா.அதனை தொடர்ந்து அவர்  அட்டகத்தி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து அவர் எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி போன்ற படங்களில் நடித்திருந்தார்.

மேலும் தளபதி விஜய் நடிப்பில் வெளியான புலி படத்தில் விஜய்க்கு மனைவியாக சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் நடித்த அணைத்து படங்களுமே மாபெரும் வெற்றிபெற்றன. ஆனாலும் தற்போது தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் இல்லாத அவர் தெலுங்கு சினிமாவில் சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இதுவரை கவர்க்காட்டாமல் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் மட்டும் நடித்துவந்த நந்திதா தற்போது மிகவும் கவர்ச்சியாக, மாடர்னாக உடை அணிந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

attakathi

                         attakathi0