சினிமா

அடக்கொடுமையே.. உங்களையும் விட்டுவைக்கலையா? அட்டக்கத்தி நந்திதா வெளியிட்ட தகவல்! செம ஷாக்கில் ரசிகர்கள்!

Summary:

சீனாவில் தோன்றிய கொரோனோ வைரஸ் கடந்த ஆண்டு நாடு முழுவதும் பரவ தொடங்கி பெருமளவில் பாதிப்பை ஏ

சீனாவில் தோன்றிய கொரோனோ வைரஸ் கடந்த ஆண்டு நாடு முழுவதும் பரவ தொடங்கி பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி ஏராளமானோர் இந்த கொடூர கொரோனாவிற்கு உயிரிழக்கும் அவலமும் ஏற்பட்டது.

இந்த நிலையில் இடையில் கொரோனா பரவல் சற்று குறைந்திருந்த நிலையில்,  தற்போது மீண்டும் இரண்டாவது அலையாக தீவிரமாக பரவத் துவங்கியுள்ளது. ஒரு நாளைக்கு லட்சத்திற்க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் அட்டகத்தி, எதிர்நீச்சல், நெஞ்சம் மறப்பதில்லை, ஈஸ்வரன் உள்ளிட்டபல படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை நந்திதாவுக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் இதுக்குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், எனக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளன. இதையடுத்து என்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். உங்களைப் பார்த்துக் கொண்டு அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் எனத் தெரிவித்துள்ளார். 


Advertisement