தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
என்னது.. இப்படியொரு டிவிஸ்டு இருக்கா! பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலக இதுதான் காரணமா? போட்டுடைத்த நடிகை நந்திதா ஜெனிபர்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வரவேற்பு பெற்று வரும் தொடர் பாக்கியலட்சுமி. குடும்பத்தை கவனித்துக்கொண்டு, தனக்கென ஒரு தனித்துவத்தை உருவாக்க பாடுபடும் குடும்பத் தலைவியின் கதையை மையமாக கொண்டு இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடருக்கு குடும்ப பெண்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது.
பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நந்திதா ஜெனிபர். இவர் பாக்கியலட்சுமியின் தோழியாகவும், அவரது கணவர் கோபிநாத்தின் முன்னாள் காதலியாக, நெருக்கமான கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார். இந்நிலையில் திடீரென அவர் அந்த தொடரிலிருந்து விலகிவிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது சொந்த காரணங்களுக்காகவே பாக்கியலட்சுமி சீரியல் இருந்து விலகிவிட்டதாக கூறியுள்ளார். அதாவது அந்த தொடரில் இதுவரை பாக்கியலட்சுமிக்கு தோழியாக இருந்த ராதிகா இனி எதிரியாக மாறப்போவதாகவும், பாசிட்டிவ் கதாப்பாத்திரமாக மக்களிடம் நல்ல பெயரை எடுத்தநிலையில் திடீரென வில்லி கதாப்பாத்திரத்தில் நடிக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.