சினிமா

ரிலீசாகவுள்ள புதிய படத்தில் யோகி பாபுவிற்கு இப்படியொரு பேரா? மிரண்டு போன ரசிகர்கள்.!

Summary:

name for yogibabu in new movie

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது மாபெரும் காமெடி நடிகராக இருப்பவர் யோகிபாபு. இவரது உடல் அமைப்பிற்கும் முகபாவனைகளும் அவர் பேசும் வசனங்களுக்கும் என ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் உள்ளது.

தொடர்ந்து பல படங்களில் பிஸியாக இருக்கும் யோகிபாபு அடுத்ததாக பட்டிபுலம் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரிக்க உள்ளார் இதில் வீரசமர் கதாநாயகனாகவும், அமிதாவ் அமிதாராவ் கதாநாயகியாகவும் நடிக்க உள்ளனர். இப்படத்தை இயக்குனர் ஷக்தி சிதம்பரத்தின் உதவியாளராக பணியாற்றிய சுரேஷ் இயக்குகிறார்.

தொடர்புடைய படம்இந்நிலையில் இப்படம் குறித்து சுரேஷ் கூறுகையில், கிழக்கு கடற்கரை சாலையில் பட்டிபுலம் என்ற ஊர் இருக்கிறது இந்த ஊரில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதும் அதனால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது ஒரு குடும்பம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. 

இந்த படத்தில் யோகி பாபுவின் கதாபாத்திரத்திற்கு பேய் என்று பெயர் வைத்துள்ளோம். இவர் படத்தில் ஐந்து நிமிடம், 10 நிமிடம் என வரப்போவதில்லை முழுமையாக ஒரு மணி நேரத்திற்கு அதகளப்படுத்தி இருக்கிறார். இப்படம் வரும் 22ஆம் தேதி வெளியாகிறது என கூறியுள்ளார்.


Advertisement