பிகில் படத்தில் அப்பா விஜய்க்கு இப்படியொரு மிரட்டலான பெயரா? உற்சாகத்தில் கெத்து காட்டும் தளபதி ரசிகர்கள் !!

பிகில் படத்தில் அப்பா விஜய்க்கு இப்படியொரு மிரட்டலான பெயரா? உற்சாகத்தில் கெத்து காட்டும் தளபதி ரசிகர்கள் !!


name for father vijay in bigil movie

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் பிகில். இந்த படத்தை மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைந்து அட்லீ இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்திற்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

கால் பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் பிகில் படத்தில் நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

Bigil

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  மேலும் அப்படத்தில் இடம்பெற்ற சிங்கப்பெண்ணே மற்றும் வெறித்தனம் பாடலும் வெளியாகி இணையத்தில் மாஸ் காட்டியது. மேலும் படம் தீபாவளி அன்று வெளியாகும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

மேலும் பிகில் படத்தில் விஜய் அப்பா, மகன் என இருவேடத்தில் நடித்துள்ளார். அதில் மகன் விஜய்க்கு மைக்கேல் என பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து  தற்போது அப்பா விஜய்க்கு ராயப்பன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இத்தகைய மிரட்டலான பெயரை கேட்ட ரசிகர்கள் படமும் மிரட்டலாக இருக்கும் காத்திருக்கின்றனர்.