அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
சமந்தாவுடன் விவாகரத்து.! மீண்டும் பிரபல பிரமாண்ட பட நடிகையுடன் காதலில் விழுந்தாரா நாகசைதன்யா??
தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக இருப்பவர் நாகசைதன்யா. இவர் முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார். நாக சைதன்யா மற்றும் தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வரும் சமந்தா இருவரும் காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர்.
கியூட் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து சமந்தா ஆன்மிகச் சுற்றுலா, தாறுமாறான கவர்ச்சி போட்டோ சூட் என பிஸியாக உள்ளார். இந்த நிலையில் நாக சைதன்யா பிரபல நடிகை ஷோபிதா துலிபாலாவுடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.

அதாவது நாக சைதன்யா ஜூப்ளி ஹில்ஸில் உள்ள தனது பங்களாவிற்கு
நடிகை ஷோபிதா துலிபாலாவை அடிக்கடி அழைத்து செல்வதாக கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மேலும் மேஜர் படப்பிடிப்பின் போது இருவரும் பலமுறை ஹோட்டலில் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் டேட்டிங் செல்கிறார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள்தான் விளக்கம் அளிக்கவேண்டும். நடிகை ஷோபிதா துலிபாலா மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் வானதி என்ற ரோலில் நடித்துள்ளார்.