இணையும் சாய்பல்லவி - நாக சைத்தன்யா ஜோடி! ரசிகர்கள் உற்சாகம்!!Naga Chaitanya & Sai Palavi commit movie after love story

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகை சாய் பல்லவி. இவர் நடித்து வெளியான ப்ரேமம் திரைப்படம் மூலம் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை தன்வசம் படுத்தி கொண்டார்.

இவரது நேர்த்தியான நடிப்பின் மீது ஈர்ப்பு கொண்ட ரசிகர்கள் பலர் இவரை பொது வாழ்க்கையிலும் பின் பற்றி வருகின்றனர். பலருக்கு ரோல் மாடலாகவே உள்ளார்.

தற்போது, நடிகர் நாக சைத்தன்யாவின் 23வது படத்திற்கு நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க உள்ளார். 

நாக சைத்தன்யாவின் 23வது படத்தின் படபிடிப்பு விரைவில் தொடங்கும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு வெளியான ‘லவ் ஸ்டோரி’ படத்திற்கு பின் நாக சைத்தன்யா - சாய்பல்லவி ஜோடி மீண்டும் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.