சினிமா

5 ஆண்டுகள் ரகசிய உறவு, கருக்கலைப்பு... அதிமுக முன்னாள் அமைச்சர் மீது நாடோடி பட நடிகை திடுக்கிடும் புகார்!!

Summary:

தமிழ் சினிமாவில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற

தமிழ் சினிமாவில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நாடோடிகள் படத்தில் பணக்கார காதல் ஜோடியாக, துணை நடிகையாக நடித்தவர் நடிகை சாந்தினி தேவா. இவர் 2ஜி ஸ்பெக்ட்ரம் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னுடன் பல ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றுவதாக புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் அவர், தன்னுடன் 5 ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்யாமல் மணிகண்டன் ஏமாற்றுகிறார். மேலும் அவரால் சிலமுறை கருக்கலைப்பு செய்ததாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நான் கேட்டால் அவர் எனது அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டுகிறார்.  அதுமட்டுமின்றி கூலிப்படையை வைத்து தன்னை கொலை செய்து விடுவதாகவும் கொலை மிரட்டல் விடுகிறார்.

எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் அவர் எடுத்து வைத்துள்ள தனது ஆபாச புகைப்படங்களை அழிக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

       

 கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். அதனால் அவர்களது பதவி பறிக்கப்பட்டது. இவ்வாறு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்தான் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
 


Advertisement