#Breaking: 71 வயதில் இயற்கை எய்தினார் பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆனந்த்; திரையுலகினர் அஞ்சலி.!



Music Director Vijay Anand Dies at the Age of 71 

 

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வந்தவர் விஜய் ஆனந்த் (வயது 71). இவர் நடிகர் ரஜினிகாந்தின் நான் அடிமை இல்லை, நாணயம் இல்லாத நாணயம், ஊருக்கு உபதேசம், சட்டம் ஒரு இருட்டறை, காவலன் அவன் கோவலன் உட்பட பல படங்களுக்கு இசையமைத்து இருந்தார்.

இளையராஜா தமிழ் இசையில் மன்னனாக இருந்தபோது, கன்னடத்தில் விஜய் ஆனந்த் புகழ்பெற்று இருந்தார். தற்போது அவர் வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் இயற்கை எய்தியுள்ளார். 

இவரது மறைவு திரைஉலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள்ளது. பலரும் அவரின் சென்னை இல்லத்திற்கு சென்று இரங்கல் தெரிவித்து தங்களின் அஞ்சலியை பதிவு செய்து வருகின்றனர்.