முதல்ல வெளியே அனுப்புங்க! இல்லைனா.. பிக்பாஸால் ஆவேசமான பிரபல இசையமைப்பாளர்! ஏன் தெரியுமா?

முதல்ல வெளியே அனுப்புங்க! இல்லைனா.. பிக்பாஸால் ஆவேசமான பிரபல இசையமைப்பாளர்! ஏன் தெரியுமா?



music-director-james-vasanthan-angry-post-about-bigboss

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 4 , 85 நாட்களை கடந்து நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா,சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், நிஷா, அர்ச்சனா மற்றும் கடந்தவாரம் அனிதா சம்பத் ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்த நிகழ்ச்சி இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவடையவுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் சண்டைகள், மோதல், வாக்குவாதங்கள் என சூடு பறக்க சென்று கொண்டுள்ளது. மேலும் இந்த வாரம் முழுவதும் ஆரி மற்றும் பாலா இருவருக்கும் இடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. மேலும் பாலா மைக்கை கட்டி வீசி எல்லை மீறி கோப்பட்டுள்ளார். மேலும் மோசமாகவும் பேசியுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் பாலாவுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேணும் எனவும் கொந்தளித்து வருகின்றனர்.

              james vasanthan

இந்த நிலையில் இதுகுறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது பேஸ்புக் பக்கத்தில்,கமல்ஹாசன் Bigg Boss நிகழ்ச்சியை அடிக்கடி இது பல்வேறு வயதினரும் பார்க்கிற ஷோ என்கிறார். அது உண்மை என்றால், பாலாஜி வெளியே அனுப்பப்பட வேண்டும். அல்லது இந்த நிகழ்ச்சிக்கு ‘A’ certificate கொடுத்து, ‘வயது வந்தவர்களுக்கு மட்டும்’ என்று தெளிவாக நிர்ணயம் செய்யவேண்டும் என கூறியுள்ளார்.  மேலும் நேற்று பார்த்தது கற்காலத்தில் குகையில் வாழ்ந்த மனிதர்கள் போட்ட சண்டை போல, காட்டுவாசி போல இருந்தது  எனவும் கூறியுள்ளார்.