சினிமா

தற்கொலைக்கு முயற்சித்த AR ரஹ்மான்! அதிர்ச்சியில் திரையுலகம்!

Summary:

Music director AR Rahman planned to suicide at the age of 25

இசைப்புயல், ஆஸ்கர் நாயகன் என அனைவராலும் அழைக்கப்படுபவர் AR ரஹ்மான். ரோஜா படத்தில் தொடங்கி இன்று சர்க்கார் வரை இவரது புகழ் நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே போகிறது. இந்நிலையில் அனைவரும் அதிர்ச்சியடையும் வகையில் தனது அனுபவம் பற்றி தெரிவித்துள்ளார் AR ரஹ்மான்.

ஏ.ஆர். ரஹ்மான் பேசுகையில் தனது 25 வயது வரை தற்கொலை எண்ணம் தன்னை வாட்டியதாக தெரிவித்துள்ளார். "எனது 25 வயது வரை, தற்கொலை எண்ணம் எனக்குள் எழுந்ததுண்டு.  நான் என் தந்தையை இழந்ததால் இவ்வாறு உணர்ந்திருக்கிறேன்.. அதன்பின் பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தது. அவ்வப்போது நம்மில் பலரும், நாம் சிறப்பானவன் கிடையாது என நினைக்கிறோம்.

ஆனால் அவை அனைத்தும் உண்மை கிடையாது. என் தந்தை இறந்து விட்டதால், நான் அதிக திரைப்படங்களை ஏற்கவில்லை. எனக்கு 35 திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அவற்றில் நான் இரண்டை மட்டுமே தேர்வு செய்தேன். 

"இந்த எண்ணம் ஒருவிதத்தில் எனக்குள் தைரியத்தை ஏற்படுத்தியது. மரணம் அனைவருக்கும் நிரந்தரமான ஒன்று. எல்லாவற்றுக்கும் முடிவு காலம் இருக்கும் போது, ஏன் பயம் கொள்ள வேண்டும்?"

என் வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகள் எனக்குள் தைரியத்தை ஏற்படுத்தின என ஏ.ஆர். ரஹ்மான் தன் வாழ்வில் ஏற்பட்ட கடினமான நிகழ்வுகளை தன் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.


Advertisement