சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் முகேனின் காதலி இவர்தானா? வெளியான நெருக்கமான புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!

Summary:

muken love with album singer nathiyaa

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் சர்ச்சைகளுக்கும், காதல் காட்சிகளும்  பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.  இந்நிலையில் பிக்பாஸ் வீட்ற்குள் சென்ற இரண்டாவது நாளே சரவணன் மீனாட்சி புகழ் கவின் மீது  போட்டியாளர் அபிராமிக்கு காதல் ஏற்பட்டது. 

அதனை தொடந்து அவரே கவினிடம் தனது காதலை  நேரடியாக தெரிவித்தார். ஆனால் கவின் அவரை காதலை ஏற்றுக்கொள்ளாமல் நண்பர்களாக இருக்கலாம் என எஸ்கேப் ஆனார். அதனை தொடர்ந்து கவின் சாக்ஷி, லாஸ்லியா என அவரது காதல் பாதைகள் மாறிக்கொண்டே போனது.bigg boss mugen lover க்கான பட முடிவு

இந்நிலையில் அபிராமி மற்றும் போட்டியின் மற்றொரு போட்டியாளரான மலேசிய ஆல்பம் பாடகரான முகேன் இருவரும் நெருக்கமாக பழகி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் கமல்ஹாசன் போட்டியாளர்களுக்கு ஹீரோ யார், வில்லன் யார், என்ற  டாஸ்கை கொடுத்தபோது அபிராமி, முகென் தான் என்னுடைய ஹீரோ என கூறி இருந்தார். 

இதனை தொடர்ந்து முகேன் சாண்டியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, நான் நதியா என்ற பெண்ணை காதலிப்பதை அபிராமியிடம் சொல்லிவிட்டேன். ஆனால் அவள் அதனை இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்று வருத்தத்துதன் கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து யார் அந்த நதியா என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது அவரை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த பெண்ணின் பெயர் யாஸ்மின் நதியா. அவர்  மலேசியாவில் பல்வேறு ஆல்பம்களில் முகேனுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் இருவரும் ஒன்றாக சேர்ந்து உள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 


Advertisement