சினிமா

தமிழகத்தையே கலக்கிய முகேனுக்கு மலேசியாவில் இப்படியொரு வரவேற்பா? வைரலாகும் ஷாக் புகைப்படங்கள்!!

Summary:

Mugen welcomed happily by malasia people

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் கடந்த மூன்று மாதங்களாக மிகவும் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த வாரத்துடன் முடிவுக்கு வந்தது.
 
மேலும் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முகேன் பிக்பாஸ் பட்டத்தை வென்று 50 லட்சம் தொகையை பெற்றார். 
முகேன் மலேசியாவை சேர்ந்த பாடகர் ஆவார். இவர் ஏராளமான ஆல்பம் பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது முதலே முகேன் போட்டியாளர்கள் அனைவரிடமும் மிகவும் நட்புடன் நடந்து கொண்டார். 

மேலும் அன்பிற்கு ஏங்கிய முகேன் ஆரம்பத்தில், அன்பு மட்டுமே அனாதை என்று கமலிடம் கூறியது பெருமளவில் வைரலானது.மேலும் சமீபத்தில் அவர் பாடிய சத்தியமா.. பாடலும் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்க துவங்கியது.

இதனை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் முகேன் தனது நாடான மலேசியாவிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு அன்பு என்றுமே அனாதை இல்லை என ரசிகர்கள் கோலாகல வரவேற்பு கொடுத்துள்ளனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 


Advertisement