சினிமா

இறுதிசடங்கு முடிந்து, கண்ணீருடன் தனது தந்தையை சுமந்துசென்ற பிக்பாஸ் முகேன்! வெளியான வீடியோ!

Summary:

Mugen done funeral to his dad

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் மலேசியாவை சேர்ந்த பாடகர் முகேன் ராவ். 105 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த முகேன் வெற்றிபெற்று பிக்பாஸ் பட்டத்தை தட்டிசென்றார்.

 பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரிடமும் மிகவும் நட்புடனும், அன்பாகவும் நடந்து கொண்ட முகேனுக்கெனவே ஏராளமான தமிழ் ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் அவர்கள் பாடிய சத்தியமா நான் சொல்லுறேன்டி பாடல் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது.  

மேலும் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது தனது குடும்பத்தைப் பற்றி கூறிய முகேன் தான் சிறுவயதில் இருந்து ஏராளமான கஷ்டங்களை சந்தித்ததாகவும் கூறிவந்தார்.  இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிறகு பல முன்னேற்றங்களை கண்ட முகேனுக்கு தற்போது பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. 

அதாவது முகேனின் தந்தை பிரகாஷ் ராவ் நேற்று முதல்நாள் மாலை 6.20 மணியளிவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதனை தொடர்ந்து நேற்று அவருக்கு இறுதிச் சடங்குகள் முடிந்து நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் முகேன் கண்ணீருடன் தனது தந்தைக்கு இறுதி சடங்கு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனை கண்ட அவரது ரசிகர்கள் பெரும் வருத்தத்துடன் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 


Advertisement