இந்தியா சினிமா

தோனியாக நடித்த பாலிவுட் நடிகர் தூக்கிட்டு தற்கொலை..! 34 வயதில் முடிந்த வாழ்க்கை..! தற்கொலைக்கான காரணம் என்ன தெரியுமா..?

Summary:

ms dhoni untold story hero commit suicide

 கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு உருவான M.S. Dhoni: The Untold Story என்ற  படத்தின் நாயகனான நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான Kai Po Che! என்ற ஹிந்தி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிங்கர் சுஷாந்த் சிங் ராஜ்புத். அமீர்கான், அனுஸ்கா ஷர்மா நடித்த PK என்ற படத்தில் அனுஷ்கா ஷர்மாவிற்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்நிலையில்தான் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படமான M.S. Dhoni: The Untold Story என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட சுஷாந்த் சிங் ராஜ்புத் இந்த பட மூலம்  இந்திய அளவில் பிரபலமானார். இதனை அடுத்து இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள்குவிந்தது. தற்போது Dil Bechara என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார் சுஷாந்த் சிங்.

இந்நிலையில் மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் இருக்கும் தனது வீட்டில்  வசித்துவந்த சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

34 வயதே ஆகும் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் எற்படுத்தியுள்ளநிலையில் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.

சுஷாந்த் சிங் தற்கொலைக்கான காரணம் குறித்து வெளியான முதற்கட்ட தகவலின்படி, சுஷாந்த் சிங் கடந்த சில மாதங்களாக மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்காக அவர் உட்கொண்ட மருந்து குறித்த சீட்டுகள் அவரது அறையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், மனஅழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். 


Advertisement