இனி கலாட்டாக்களுக்கு பஞ்சமில்லை! விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பமாகும் கலகலப்பான நிகழ்ச்சி! வைரலாகும் வீடியோ!!

இனி கலாட்டாக்களுக்கு பஞ்சமில்லை! விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பமாகும் கலகலப்பான நிகழ்ச்சி! வைரலாகும் வீடியோ!!


mr-and-mrs-chinnathirai-season-3-promo-video-viral

விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல்களை மட்டுமன்றி, ரசிகர்களை பொழுதுப்போக்கும் வகையிலும், திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் ஒரு சில நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று திரும்ப திரும்ப பார்க்கும் ஆர்வத்தை தூண்டும்.

அதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்களும், அவர்களது உண்மையான ஜோடிகளுடன் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்கள் அனைவரையும்  வைப்பர். செம ஜாலியாக, கலாட்டாக்களுக்கு பஞ்சமில்லாமல் செல்லும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு ஏராளமான கலகலப்பான டாஸ்க்குகள் கொடுக்கப்படும்.

இந்த நிலையில் தற்போது ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3 தொடங்கியுள்ளது. இதனை மாகாபா ஆனந்துடன் இணைந்து அர்ச்சனா தொகுத்து வழங்கவுள்ளார். இதன் ப்ரோமோ வீடியோக்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.