சினிமா

தனது அடையாளமான முக்கிய பொருளை ஏலம்விட்ட ஆபாச நடிகை மியா கலீஃபா! ஏன் தெரியுமா? வெளியான புதிய தகவல்!

Summary:

Miya klifa auctions glasses to subbort lebonan

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்ட  அம்மோனியம் நைட்ரேட்  கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடித்துச் சிதறி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் 200 பேர் வரை  பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் அந்த  விபத்து நடைபெற்ற கட்டடத்தைச் சுற்றிலும் சுமார் 10 கி.மீ வரை இருந்த அனைத்து வீடுகளும், கட்டடங்களும் பலத்த சேதமடைந்தன. மேலும் அங்கு வசித்த மக்கள் பலரும் பெருமளவில் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் ஆபாசப்பட முன்னாள் நடிகை மியா கலிஃபா, வெடி விபத்தால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய நிதி திரட்டுவதற்காக முன்வந்துள்ளார்.

மேலும் லெபனானை பூர்வீகமாக கொண்ட அவர் நிதி திரட்டுவதற்காக, தனது அடையாளங்களுள் ஒன்றான கண் கண்ணாடியை ஏலத்தில் விட்டுள்ளார். இந்நிலையில் அந்த ஏலத்தில் மியா கலீபாவின் கண்ணாடியின் விலை தற்போது ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை எட்டியுள்ளது. மேலும் அதனை வாங்குவதற்கு பலரும் பெருமளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Advertisement