சாவி இல்ல! அவரு என்ன தப்பு பண்ணாறு! நடுரோட்டில் மயங்கி விழும் அளவிற்கு கடைக்காரரை தாக்கிய போலீஸ் அதிகாரி! வெளியான வீடியோவால் பரபரப்பு...



police-officer-assaults-shopkeeper-kota

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் சமூகத்தைக் குலைக்கும் ஒரு போலீஸ் அதிகாரியின் தாக்குதல் சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது. மே 29ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படுகிறது.

 அதிர்ச்சி தரும் காட்சி

பெரும்பாலான சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகும் வீடியோவில், சாலையின் நடுவே ஒருவர் மீது போலீசாரால் மேற்கொள்ளப்படும் தாக்குதல் தெளிவாக பதிவாகியுள்ளது. தாக்குதலுக்குப்பின் அந்த நபர் மயங்கி கீழே விழும் காட்சியும் அந்த வீடியோவில் தெளிவாக காணப்படுகிறது.

பைக்கை நகர்த்தாததால் வாக்குவாதம்

ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி புஷ்பேந்திர பன்சிவால் என்பவர், கடையில் வேலை பார்த்து வந்த ரிஸ்வான் என்பவரிடம், கடை முன் நிறுத்தியிருந்த பைக்கை நகர்த்தும்படி கூறியுள்ளார். ஆனால் பைக்கில் பூட்டு இருந்ததால் நகர்த்த முடியாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை காரணமாகக் கொண்டு, அதிகாரி கோபத்துடன் ரிஸ்வானை திட்டியும், பின்னர் நடுரோட்டில் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வீடியோ எடுத்து ரகசியமாக ரசித்துப் பார்க்கும் சாமியாரின் மன்மத லீலைகள்! சூடானதால் தெரிந்த உண்மை! இப்படி ஒரு சம்பவமா?

போலீஸ் மீது புகார், மக்கள் கடும் கண்டனம்

தாக்குதலுக்குள்ளான ரிஸ்வான், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீடியோ வெளியான பிறகு, சமூக ஊடகங்களில் அதிகாரிக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

சமூக வலைதளங்களில் கோரிக்கைகள்

ஒரு பயனர், “ஒரு தவறான வாகன நிறுத்தத்திற்காக ஒரு சாதாரண நபரை தாக்குவது எந்த சட்டத்தின் கீழ்?” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் "@KotaPolice அதிகாரியை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும், பாதிக்கப்பட்ட நபருக்கு நியாயமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்" எனவும் சமூக வலைதளங்களில் வலியுறுத்தல்கள் அதிகரித்துள்ளன.

வீடியோ வைரலாவதால், அதிகாரியின் மீதான நடவடிக்கை எப்போது எடுக்கப்படும் என்பதற்காக மக்கள் காத்திருக்கின்றனர்

.

இதையும் படிங்க: திருமணம் ஆகி 2 மாதம் தான்! மனைவியை காரில் அழைத்து சென்று கணவன் செய்த கொடூர சம்பவம்! வெளிவந்த பதறவைக்கும் காரணம்...