ப்பா.. வேற லெவலில் மாஸ் காட்டுறாரே! செம மாடர்னாக, ஸ்டைலாக விஷால் பட நடிகை வெளியிட்ட வீடியோ!!Mirunalini latest photoshoot video viral

டிக்டாக் சமூக வலைதளத்தின் மூலம் திரையுலகில் களமிறங்கி பிரபலமானவர்கள் ஏராளம். அவ்வாறு ஏராளமான ரசிகர்களை பெற்று தற்போது பிரபல நடிகையாக இருப்பவர்
 மிருணாளினி. சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றிய அவர் டப்ஸ்மாஸ், டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிருணாளினி சூப்பர் டீலக்ஸ், சாம்பியன் போன்ற படங்களில் நடித்தார். பின்னர் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த எம்ஜிஆர் மகன் படத்தில் அவருக்கு ஜோடியாகவும், விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் வெளிவந்த எனிமி படத்தில் விஷாலுக்கு ஜோடியாகவும் நடித்து இருந்தார். மேலும் அவரது கைவசம் சில படங்கள் உள்ளன.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் அவர் தற்போது செம மாடர்னாக ஸ்டைலாக போஸ் கொடுத்து எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.