சினிமா

மைக்கேல் ஜாக்சன் மகள் தற்கொலைக்கு முயற்சி செய்தாரா! அசிங்கமாக திட்டி அவரே கூறிய பதில்.!

Summary:

michale jackson daughter suicide

பாப் இசையாலும், நடனத்தாலும் உலகளவில் ஏரளமான ரசிகர்களை பெற்று பிரபலமானவர் மைக்கேல் ஜாக்சன், இவர் கடந்த 2009-ம் ஆண்டு மாரடைப்பால் இறந்தார்.  இவருக்கு பாரிஸ் ஜாக்சன் என்ற மகளும், ஜோசப் ஜாக்சன் மற்றும் பிரின்ஸ் ஜாக்சன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

மாடல் அழகியான பாரிஸ் ஜாக்சன் சமீபத்தில் வெளியான, லீவிங் நெவர்லேண்ட் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் மைக்கேல் ஜாக்சன், சிறுவர்களைத் தவறாகப் பயன்படுத்தியதாகப் புகார் எழுந்தது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பாரிஸ் ஜாக்சன் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் கை நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாகவும், பின்னர் அவர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இதனை கண்டு அதிர்ச்சியான பாரிஸ் ஜாக்சன் இது முற்றிலிருந்து வதந்தி எனவும் அதை பரப்பியவர்களை கெட்டவார்த்தையால் திட்டியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


 


Advertisement