சினிமா

மெட்டி ஒலி புகழ் செல்வத்திற்கு இப்படி ஒரு சோகமா? அவரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

Summary:

Metti oli pukal actor selvam current status

சன் தொலைக்காட்சியில் சீரியல் பார்க்கும் அனைவர்க்கும் தெரிந்த மிகவும் பிரபலமான சீரியல் மெட்டி ஒலி. ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது இந்த சீரியல். இந்த சீரியலில் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் ஒருவர் நடித்திருப்பார். அன்றைய காலகட்டத்தில் இவரது நடிப்பு அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. மேலும் இவரை யாரும் மறந்திருக்க வாய்ப்பு இல்லை.

இவரது உண்மையான பெயர் விஸ்வநாதன். கல்லூரி படிப்பினை முடித்த இவர் ஒரு சில சிறிய சிறிய நாடகங்கள் நடித்து வந்தார். பின்னர்தான் இவருக்கு மெட்டிஒலியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பினை மிகவும் சரியாக பயன்படுத்திக்கொண்டார் செல்வம்.

நாடகம் மூலம் பிரபலமான இவர் பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகளை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். மெட்டி ஒலி  சீரியலுக்கு பிறகு பொன்னுஞ்சல் என்ற தொடரில் மட்டும் நடித்தார். பின்னர் சினிமா துறைக்கு செல்ல பல முயற்சிகளை செய்து தோற்றுப்போனார் செல்வம்.

இதனால் தான் மிகவும் வருத்தத்தில் இருப்பதாக அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தற்போது மனைவியுடன் சேர்ந்து கம்பெனி ஒன்றினை நடத்தி வருகிறார் நம்ம மெட்டிஒலி புகழ் செல்வம்.


Advertisement