அஜித்திற்கு நயன்தாரா கொடுத்த பெரிய சர்ப்ரைஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ காட்சி!
BREAKING: டெல்லி கூட்டத்தில் கூட்டணி குறித்த முடிவை அறிவித்த காங்கிரஸ் கட்சி! பரபரப்பில் அரசியல் களம்!
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி அரசியல் சூடுபிடித்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கோரி அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசியல் சிக்கலில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை
திமுக கூட்டணியில் முக்கிய பங்காளியாக உள்ள காங்கிரஸ் கட்சி, சமீப காலமாக ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதி ஒதுக்கீடு வேண்டும் என தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. இதனால் திமுக தலைமையிடம் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.
தவெக உடன் கூட்டணி பேச்சு?
கூடுதல் தொகுதிகளை ஸ்டாலின் வழங்காத பட்சத்தில், காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றி கழகம் (தவெக) உடன் கூட்டணி அமைக்கும் என்ற தகவல்கள் பரவலாக பேசப்பட்டன. ஆனால் இது தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படிங்க: கெத்து காட்டும் ஸ்டாலின்! திமுக கூட்டணியில் ஒரே நேரத்தில் இணையும் இரண்டு கட்சிகள்.....! சூடுபிடிக்கும் அரசியல் களம்!
ஐந்து பேர் கொண்ட குழு
இதற்கிடையே காங்கிரஸ் கட்சி ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்து, திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் தவெக உடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பையும் காங்கிரஸ் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
டெல்லி கூட்டத்தில் முடிவு
இந்நிலையில், தவெக உடன் கூட்டணி இல்லை என்பதை காங்கிரஸ் தலைமை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், திமுக கூட்டணியிலேயே தொடர்ந்து பயணிக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் திமுக கூட்டணியில் தொடர விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், 2026 தேர்தலை எதிர்கொள்ள திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்! தவெக கட்சியுடன் கூட்டணி இல்லை..... விஜய்க்கு ஷாக் கொடுத்த முக்கிய பிரபலம்.!