எது மாஸ்?.. தனுஷின் டயலாக்கை டெம்பிளேட் ஆக்குவது தான் மாஸ்..! கலாய்த்து தள்ளும் மீம்ஸ் கிரியேட்டர்கள்..!!

எது மாஸ்?.. தனுஷின் டயலாக்கை டெம்பிளேட் ஆக்குவது தான் மாஸ்..! கலாய்த்து தள்ளும் மீம்ஸ் கிரியேட்டர்கள்..!!


memes creators kidding with dhanush

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "திருச்சிற்றம்பலம்". இப்படம் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசிய மாஸ் வசனம் தற்போது மீம்ஸ் கிரியேட்டர்களுக்கிடையே ட்ரெண்டாகி வருகிறது. 

Dhanush movie

ஏனெனில் அந்த மாஸ் என்ற வார்த்தையை வைத்து அவருடைய புகைப்படத்துடன் டெம்ப்ளேட்டை மீம்ஸ்களாக கிரியேட்டர்கள் போட்டு வருகின்றனர். திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழாவில், "மாஸ்னா என்ன? செஞ்சிடுவேன்னு சொன்னா அது மட்டும் மாஸ் கிடையாது. 

ஆபத்தில் இருக்கிறவங்களை காப்பாற்றினால் அதுதான் மாஸ். பெற்றோரை கடைசிவரை பார்த்துக் கொண்டால் அதுதான் மாஸ்". என்று தனுஷ் பேசியிருந்தார். தனுஷ் பேசிய இந்த வசனத்தை வைத்து பலரும் கலாய்த்து வருகின்றனர். 

Dhanush movie

இதில் ஒரு நெட்டிசன் "எது மாஸ். எல்லாரும் இந்த டெம்ப்ளேட்டை போடறாங்கன்னு நம்மளும் போட்டா அது மாஸ்" என்று ட்வீட் போட்டுள்ளார். மேலும் பல மீம்ஸ் கிரியேட்டர்களும் இதனை டெம்ப்ளேட்டாக வைரலாக்கி வருகின்றனர்.