இதெல்லவா நட்பு.! கணவர் இறப்பிற்கு பின் முதன்முதலாக வெளியே வந்த நடிகை மீனா! அதுவும் கூட யாரெல்லாம் இருக்காங்க பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் முன்னணி நடிகையாக ஏராளமான படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை மீனா. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி பெங்களூருவை சேர்ந்த கணினி பொறியாளரான வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 28-ந் தேதி காலமானார். அவரது மறைவு மீனாவின் குடும்பத்தினரை நிலைகுலைய வைத்தது.
இந்த நிலையில் கணவரை இழந்து மீளாதுயரில் இருக்கும் நடிகை மீனாவை அவரது தோழிகளான ரம்பா மற்றும் கலா மாஸ்டர் சந்தித்துள்ளனர். மேலும் அவரை கடற்கரைக்கு அழைத்து சென்று இயல்பு நிலைக்கு திரும்ப முயற்சி செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.