மாஸ்டர் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் லீக்.! வைரலாகும் வீடியோ.! அதிர்ச்சியில் படக்குழு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துவரும் படம் மாஸ்டர். விஜய்க்கு ஜோடியாக பேட்ட படத்தில் நடித்த மாளவிகா மோகனன் நடித்துவருகிறார். மிரட்டல் வில்லனாக விஜய் சேதுபதி இந்த படத்தில் நடித்துவருகிறார். டெல்லி, கர்நாடகா ஆகிய இடங்களில் நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
தற்போது படத்தின் வில்லன் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின் போது விஜய் சேதுபதி நடித்த ஒரு காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
இதற்கு முன்னர் விஜய் கழுத்தில் ஐடி கார்டுடன் நடிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் காட்சியும் வெளியாகி இருப்பதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது. செல்போனில் படம் பிடித்த இந்த காட்சிகள் டிக் டாக், ட்விட்டர் உள்ளிட்ட செயலிகளில் தற்போது வைரலாகி வருகிறது.
#Master Villian Vijay Sethupathy Leaked Video 🔥😎
— Ꞟꟽ.мαѕτєя™ (@Master__VJ) January 7, 2020
Veri Max💥💥💥 pic.twitter.com/otS2h9sS19