மாஸ்லுக்கில் திரையுலகையே அதிரவைத்த பிரபலங்களா இது.! சன்பிக்சர்ஸ் வெளியிட்ட ஸ்பெஷலான ஷாக் புகைப்படம்!!



mass heros younger pictures viral

தமிழ் சினிமாவில் ஏராளமான மாஸ் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களாக பட்டையை கிளப்பி வருபவர்கள் ரஜினி, அஜித், விஜய், சூர்யா மற்றும் தனுஷ். இவர்களுக்கென ஏராளமான ரசிகர்கள் மற்றும்  நற்பணி மன்றங்கள் உள்ளன.

மேலும் இவர்களது திரைப்படங்கள் வெளிவரும் நாட்களை ரசிகர்கள் திருவிழாக்களை போல கொண்டாடி வருகின்றனர். மேலும் ரசிகர்கள் தங்களது விருப்பமான நடிகர்களின் படங்கள் குறித்த தகவல்கள், பாடல்கள், டீஸர், டிரெய்லர் என ஒவ்வொரு சிறிய அப்டேட்களையும் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து பட்டையைக் கிளப்பி வருகின்றனர் 

இந்நிலையில் சமீப காலமாக சமூகவலைத்தளங்களில் facechallenge டிரெண்டாகி வருகிறது. அதன்படி நெட்டிசன்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும், தான் வயதானால் எவ்வாறு இருப்போம் என்பதை fஆப் மூலம் மாற்றி பகிர்ந்து வருகின்றனர்.

 இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மாஸ் ஹீரோக்களின் போஸ்டர்களை இளமைக்காலத்தில் உள்ளது போன்று மாற்றி அமைத்து தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் இதனைப் போன்று பல புகைப்படங்களை வெளியிட்டு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.