ரசிகர்களுக்கு ஷாக்.. இயக்குனர் பாரதிராஜா திடீரென மருத்துவமனையில் அனுமதி.. உடல்நிலை குறித்து அவரது மகன் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!!

ரசிகர்களுக்கு ஷாக்.. இயக்குனர் பாரதிராஜா திடீரென மருத்துவமனையில் அனுமதி.. உடல்நிலை குறித்து அவரது மகன் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!!


manoj-speech-about-barathiraja

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநராக வலம்வருபவர் பாரதிராஜா. இவர் கடந்த வாரம் மதுரை விமான நிலையத்தில் மயக்கம் அடைந்ததால், ஒருநாள் மதுரையிலேயே ஓய்வெடுத்து பின் சென்னைக்கு திரும்பினார். சென்னையில் உள்ள நீலாங்கரையில் இருக்கும் தனது இல்லத்தில் அவர் ஓய்வெடுத்த நிலையில், மீண்டும் அஜீரண கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் மருத்துவமனையில் அவர் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், பரிசோதனைகள் முடிந்து தற்போது சிகிச்சை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அவரது உடல்நலம் குறித்து அவரது மகன் மனோஜ் பாரதிராஜா தெரிவிக்கையில், "தனது தந்தையின் உடலில் நீர்சத்து குறைபாடு இருப்பதால் உடல்நிலை சோர்வாக இருக்கிறார். 

director barathiraja

தற்போது அவருக்கு ஓய்வுதேவை. எனவேதான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்" என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் "இரண்டு, மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும், தேவையான சிகிச்சைகள் முடிந்தவுடன் விரைவில் வீட்டிற்கு திரும்புவார்" என்றும் கூறினார்.