இந்த வயசுல காட்டாம எப்போ காட்டுறது?? அந்த கேள்விக்கு நடிகை மாளவிகா மோகனன் பதிலடி!!

தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதனை தொடர்ந்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படத்தில் நடித்தார். பின்னர் மாளவிகா மோகனன் தற்போது தனுஷுடன் இணைந்து மாறன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் மாளவிகா வீடியோ ஜர்னலிஸ்டாக நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர், நான் ரஜினி, விஜய் ஆகியோரின் படங்களில் நடித்திருந்தாலும் அவை பெரிய கேரக்டர் என கூறமுடியாது. மாறன் படத்தில்தான் முழுமையான ஹீரோயினாக நடித்துள்ளேன்.
சிறிய பட்ஜெட், பெரிய பட்ஜெட் வித்தியாசம் இல்லாமல் எல்லாவிதமான கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும் என ஆசை என்று கூறியுள்ளார். மேலும் அவரிடம் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுகிறீர்களே என கேட்கப்பட்டபோது மாளவிகா, எனக்கென்ன 60 வயசா ஆகிவிட்டது? இந்த வயசுல கவர்ச்சி காட்டாம எப்போ காட்ட முடியும் என பதிலளித்துள்ளார்.