சினிமா

மிக பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம்! சோகத்தில் திரையிலகினர், ரசிகர்கள் இரங்கல்!!

Summary:

மலையாள சினிமாவில் வில்லன் நடிகராக கொடிகட்டி பறந்த நடிகர் ரிஷபாவா உடல்நலக்குறைவால் உயிரிழந்

மலையாள சினிமாவில் வில்லன் நடிகராக கொடிகட்டி பறந்த நடிகர் ரிஷபாவா உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  90'ஸ் காலகட்டங்களில் மலையாள சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் ரிஷபாவா. இவர் பின்னணிக் குரல் கொடுப்பவராகவும் இருந்தார். 

இவர் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் 60 வயது நிறைந்த அவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென பக்கவாதம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமாகியுள்ளார். அவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.


Advertisement