பிகில் பாடலுக்கு இப்படியொரு குத்தாட்டமா? பிரபல இளம்நடிகர் வெளியிட்ட வீடியோவால் வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

malaiyala actor dance with vijay bigil song


malaiyala-actor-dance-with-vijay-bigil-song

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல் படங்களை அடுத்து மூன்றாவது முறையாக பிகில் படத்தில் நடித்துள்ளார் தளபதி விஜய். இந்த படத்திற்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

கால் பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் பிகில் படத்தில் நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  

vijay

இந்நிலையில்  பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து விஜய் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானது. மேலும் பட்டி தொட்டியெல்லாம் பாடல் ஒலிக்க துவங்கியது. 

நடிகர் விஜய்க்கு உலகம் உழுவதும் ரசிகர்கள் உள்ளனர். மேலும் நடிகர்களே அவருக்கு ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில் பிகில் படத்தில் விஜய் பாடிய வெறித்தனம் பாடலுக்கு பிரபல மலையாள இளம்நடிகர் நீரஜ் மாதவ் குத்தாட்டம் ஒன்றை போட்டுள்ளார்.  மேலும் அந்த வீடியோவை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.