தனது மகனுக்கு அழகிய தமிழ்பெயரை வைத்துள்ள மைனா நந்தினி! என்ன பெயர் தெரியுமா? ஹேப்பியாக வாழ்த்தும் ரசிகர்கள்!

தனது மகனுக்கு அழகிய தமிழ்பெயரை வைத்துள்ள மைனா நந்தினி! என்ன பெயர் தெரியுமா? ஹேப்பியாக வாழ்த்தும் ரசிகர்கள்!


Maina nandhini son name is dhruvan

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் மைனாவாக நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில்  பெருமளவில் பிரபலமானவர் மைனா நந்தினி. அதனைத் தொடர்ந்து அவர் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் ரியாலிட்டி ஷோக்களிலும்  கலந்துகொண்டுள்ளார்.

நந்தினி வெள்ளித்திரையிலும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த ஆண்டு நடிகரும், நடன இயக்குநருமான யோகேஷ்வரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறந்து ஒரு மாதங்களிலேயே அவர் சாதாரண நிலைக்கு திரும்பி சீரியலில் நடித்து வருகிறார்.

மைனா நந்தினி மற்றும் யோகேஸ்வரன் தம்பதியினர் தங்களது குழந்தைக்கு துருவன் என பெயரிட்டுள்ளனர். அதனை நந்தினி மிகவும் மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.