சினிமா

ஒருவழியா மிஸ் இந்தியா காதலியை கரம்பிடித்தார் பிக்பாஸ் மஹத்! வைரலாகும் கொண்டாட்டமான கியூட் வீடியோ!

Summary:

mahat marry his lover prachi

தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளிவந்த வல்லவன், காளை போன்ற திரைப்படங்களில் சிறுகதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் மஹத்.  அதனைத் தொடர்ந்து அவர் அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா திரைப்படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார்.

பின்னர் பிரியாணி, வடகறி, வந்தா ராஜாவாதான் வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து மஹத்  பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ்ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். மேலும் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகை யாஷிகாவுடன் காதல் என சர்ச்சையிலும் சிக்கி வெளிவந்தார்.பின்னர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளிய அவருக்கு படவாய்ப்புகள் வரத்துவங்கியது.

நடிகர் மஹத் மிஸ் இந்தியா பட்டம் பெற்ற பிராச்சி மிஸ்ராவை  காதலித்து வந்தார். அவருக்கு பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து  இன்று மஹத், பிராச்சி திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் நடிகரும், மஹத்தின் நண்பருமான சிம்பு கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

View this post on Instagram

♥️

A post shared by STR (@str.offcial) on

View this post on Instagram

Mahat Prachi ❤️

A post shared by STR (@str.offcial) on

View this post on Instagram

Mahat prachi wedding ♥️🖤

A post shared by STR (@str.offcial) on


Advertisement