சினிமா

சிம்பு ரசிகர்களுக்கு ஹேப்பியான செய்தி! வெளியானது மாநாடு படம் குறித்த சூப்பரான அப்டேட்! என்ன தெரியுமா?

Summary:

சிம்புவின் மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இதன் டீசர் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இப்படத்தை தொடர்ந்து சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

அரசியலை மையமாகக் கொண்ட இப்படத்தில் ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன், பாரதி ராஜா, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் மாநாடு படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் 21ஆம் தேதி 10.44 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிம்பு வித்தியாசமான போஸ்டருடன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட  ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Advertisement